Saturday, June 13, 2026
No menu items!

ட்ரம்ப்

பாகிஸ்தானின் கோரிக்கைக்காகவே போர் நிறுத்தம் தொடர்கிறது; ட்ரம்ப்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையை மேற்கோள் காட்டி, ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் "கடுமையாகப் பிளவுபட்டுள்ளதால் அதன் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்க நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!

ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை" என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இன்று (13) அல்ஜீரியாவுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ (XIV), தான் அரசியல் விவாதத்தில்...

புடினுடன் பேசும் திட்டம் கை விடப்பட்டது – “வீணான சந்திப்பு வேண்டாம்” என கூறிய ட்ரம்ப்!

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும்...

அமைதிக்கான 2025 நோபல் பரிசு: டொனால் ட்ரம்ப்க்கு கிடைக்குமா?

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்காக 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா-இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இவரை பரிந்துரைத்துள்ளன. ஆனால்,...

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்பந்தம் — டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் இதனை "உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்" என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும்,...

“என் வெற்றிக்கு டிக்டொக் காரணம்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் வைரல் பதிவு!

அமெரிக்கத் தேர்தலில் தன்னை வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். டிக்டொக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முயற்சி தொடர்ந்து நிலுவையில் இருக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு விலகிய கருத்தை வெளியிட்டுள்ளார். "நான் டிக்டொக்கை விரும்புகிறேன். அது எனக்கு வெற்றியைத் தந்தது" என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், டிக்டொக் செயலியை...

பலஸ்தீன அங்கீகாரம்: கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கடினம் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம்!

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் திங்களன்று பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், ஈரானிய தாக்குதல் குறித்து கத்தார் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஏன் முக்கியமானது:...

ட்ரம்ப் – புடின் இடையே தீவிர பேச்சுவார்த்தை..!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக நேற்று இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பெப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ரஷ்ய...

சீனா மீதான வரியை குறைப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலனை..!

சீன இறக்குமதி பொருட்கள் மீதான 145 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாக குறைப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலனை செய்து வருகிறார். தற்போதைய சூழலில் சீன பொருட்கள் மீது 80சதவீதவரிவிதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. சீனா தனது சந்தையை உலகத்துக்கு திறந்துவிட வேண்டும். மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்றும் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img