யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அரசியல் இலாபங்களுக்காக விடுவிக்கப்படமாட்டாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார். இதற்கிடையில், ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வட மாகாணத்தில், நீண்ட காலமாக பொதுமக்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் நிலங்களின் மீதான உரிமையை கோரிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாதுகாப்பு கோணத்தில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக அரசியல் மற்றும் சமூகமட்டத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.








