கொஸ்கம – அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், சாரதி உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








