2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க நேற்று (05.09) ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்தே இவ்வாறு இணைந்து கொண்டாடுள்ளார்.

இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தோட்ட தேர்தல் தொகுதி அமைப்பாளரும், மாத்தளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவருமான சிந்தன ஏகநாயக்க, நவலங்கா சுதந்திரக் கூட்டணியின் லக்கல தேர்தல் தொகுதி அமைப்பாளர் மைத்திரி டோசன் ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here