ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது

1960 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான அமைதியான பேரணியில் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இனப்பாகுபாடு இருப்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1966 ஆம் ஆண்டு இனப்பாகுபாடு நிராகரிப்பு தினத்தை அனுஷ்டிக்க வலியுறுத்தியது.

இனப்பாகுபாட்டை காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு, இப்படி கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here