சிங்கப்பூரில் நாளை மறுதினம் (3) பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.

1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here