பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”தற்போதுள்ள பணி வெற்றிடங்களுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்

பொது சேவையில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள் குழுவும் உள்ளது. இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு மற்றொரு குழு
நியமிக்கப்படும்.

தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here