பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒரு பெரும் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. ஆனால் இது அரசியல் ரீதியாக அல்ல. அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

நாடாளுமன்ற கட்டடத்தில் பெரும் எண்ணிக்கையில் அங்கும் இங்கும் ஓடி, அலுவலகங்களை இரவுநேர ”மாரத்தான்” பந்தையப் பாதையாக மாற்றும் எலிகளால்தான் பிரச்னை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடந்த கூட்டங்களின் பதிவேடுகளைப் பார்க்க, ஒரு அதிகாரப்பூர்வ குழுவினரை  உத்தரவிட்ட போதுதான் இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. பதிவேடுகளில் பெரும்பாலானவை எலிகளால் மோசமாகக் கடிக்கப்பட்டு இருக்கிறமை கண்டறியப்பட்டுள்ளது.

எலிகளின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் இதனால் நாடாளுமன்றத்தை எலிகள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு ஆண்டு பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பூனைகளை வைத்து சமாளிக்க தீர்மானித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here