கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறியும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 2,800க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதன் விசாரணைப் பிரிவு கூறுகிறது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததாக பிடிபட்ட 425 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாததற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட 2,060 சம்பவங்கள் இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ளன.
அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருந்த 240 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.








