மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 800,200 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு போதுமான நீர் திறந்துவிடப்படும் என அதன் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி லந்தேகும்புர தெரிவித்துள்ளார்.
இந்த நீரை மகா பருவத்தில் நெல் மற்றும் கூடுதல் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.
திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் பாரிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தற்போது 60 வீதமாக உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மகாவலி வலயத்திற்குட்பட்ட 247,500 ஏக்கர் பயிர்ச் செய்கைக்கு நீர் விடப்படவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்த மழைவீழ்ச்சியில் 50% மாத்திரமே பதிவாகியுள்ளதாக அதன் நீர் கட்டுப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.








