கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேளைகளில் தொடர்ச்சியாக 5, 6 காட்டு யானைகள், மாடுகள் போல  நெற்களை மேய்ந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலி, தற்பொழுது நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு 70 நாட்கள் கடந்த நிலையில் யானைகள் துவசம் செய்து வருவதாகவும் இதன் காரணமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் நெற் செய்கையில் மேற்கொண்ட விவசாயிகள் இரவு பகலாக நித்திரை இன்றி காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் நெற்செய்கையில் பெரும் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது பகுதிக்கு வருகை தந்து விவசாயிகளின் நிலைகளை நேரடியாக பார்வையிட்டு எமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர வேண்டுமென இப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here