தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் இன்று (02.11.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார்.

பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜெனிவாவுக்கு கொண்டு போன போர்க் குற்ற விசாரணையை காலத்தை நீடித்து நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசு கட்சியினர். வடக்கு கிழக்கு பிரிப்பை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மாகாண சபையை நடத்த முடியாமல் போனமைக்கும் இவர்களை காரணம்.

ஆயிரம் விகாரைத் திட்டத்தை கொண்டு வந்த சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கக் கோரியவர்கள். வலி வடக்கு பாதை திறப்புக்கு தானே காரணம் என்று சொல்கிறார், அது அரசு தானாகவே எடுத்த முடிவு. மக்களுக்கு ஒருபோதும் அமைச்சர் ஆசை வரவில்லை அவருக்குத்தான் அமைச்சர் ஆசை வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here