முல்லைத்தீவில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர், அவர் பணிபுரியும் புல்மோட்டை பாடசாலையில் தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே நேற்றையதினம் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் அவரது மனைவி தனது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

இதனையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள், குறித்த ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரிழந்த நிலையில், இரத்த காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை காவல்நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நீதவானின் உத்தரவுக்கு அமைய பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here