மாத்தறை காவல்பிரிவுக்குட்பட்ட கரையோர வீதி பகுதியில் நேற்று (25) இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது சிற்றூந்தில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் தொடர்பில் மாத்தறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here