அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்க தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவர்கள் அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக அவரை மன்றுக்கோ அல்லது வெளியிலோ அழைத்துச் செல்வது சிரமம் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ரணில் விக்ரமசிங்கவின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here