வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சூட்சமான முறையில் பயண பொதியில் எடுத்துச் செல்லப்பட்ட கசிப்பு பொதி உடைந்து கசிந்ததில் பேருந்தில் பயணித்த மக்கள் துர்நாற்றம் வீசியதை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

சட்டவிரோத கசிப்பை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் பரந்தன் பகுதியில் இருந்த வீதி போக்குவரத்து பொலிசாரிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் சந்தேக நபர் மற்றும் அவரால் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத கசிப்பையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் .

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here