பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி, பேஸ்புக் மூலம் குற்றவாளிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (SSP) புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (24) கருத்து வெளியிட்ட எஸ்.எஸ்.பி. மானதுங்க,

முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபரை சமூக ஊடகங்கள் வழியாக, “உனக்கு வேலை இல்லையா? நீ சும்மா இருக்கிறாயா? கொஞ்சம் வியாபாரம் செய்யலாமா?” போன்ற பேச்சுடன் அணுகியதாக தெரிவித்தார்.

இந்த தொடர்புகள் இறுதியில் சந்தேக நபரை கொலையில் ஈடுபடுத்த வழிவகுத்தன என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் முன்னாள் ஆயுதப்படைகள் அல்லது பொலிஸ் உறுப்பினர்கள் என்பதை நாம் தெளிவாகக் காணலாம். அவர்களைக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பேஸ்புக் மூலம் அவரை கவர்ந்திழுப்பதற்கு முன்பு அவர் இராணுவத்திலிருந்து வெளியேறியதை அவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here