யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தினை வட்டிக்கு வழங்கி, வட்டி பணத்தை வசூலிக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுத்திருப்பது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அந்நிலையில் கடந்த வாரம்,திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தை பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
சந்தைக்கு வருவோரை துன்புறுத்தியுள்ளனர் போதைப்பொருள் மாபியாக்கள் போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தை வட்டிக்கு வழங்கி, வட்டி பணத்தை வசூலிப்பதற்கான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்மைகே யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.








