ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,

ரயில்களை முறையாக பராமரிக்க ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜன்னல்கள், கழிப்பறை, மின்விசிறிகள் வேலை செய்யாதது போன்ற பிழைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

ஒரு மாதத்தில் அனைத்து சீரமைப்புகளையும் முடிக்குமாறு அதிகாரிகளை கட்டளை செய்தார்.

ஜா-எலாவைச் சேர்ந்த ஒரு சிறு பிள்ளை ரயிலில் பயணிக்கும் போது ஜன்னல் விழுந்து இரண்டு விரல்களை இழந்தது.

சிறு பிள்ளை தனது முதல் ரயில் பயணத்தில் இரண்டு விரல்களை இழந்த பிறகு, பெற்றோர்களாகிய நாமே அந்த விடயம் குறித்து பொறுப்பேற்க வேண்டும்.

நான் அந்த பிள்ளையின் தந்தையிடம் பேசினேன். அவர் கேட்டார், “ஐயா​ இந்த நாட்டில் ஏன் வாழ வேண்டும்” என்று  இச் சம்பவத்தை எடுத்துக்காட்டி,

நான் மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வகையில் புதுப்பித்தலைச் செய்தே ஆக வேண்டும். கழிப்பறை, ஜன்னல்கள், மின்விசிறி.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்று மூன்று நாட்களில் சொல்லுங்கள். எனக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.

ரயில்வே திணைக்களத்தில் உள்ள அனைவருக்கு கூறுகிறேன், “சேவையை வழங்க முடியாவிட்டால் வெளியேறுங்கள்” இது கடைசி எச்சரிக்கை. இது உண்மையிலேயே கசப்பாக மாறி வருகிறது.” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here