ராஜஸ்தானில் நேற்று ஒரு தனியார் பேருந்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்சாதன படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த பேருந்து, 57 பயணிகளுடன் சென்றபோது நெடுஞ்சாலையில் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தினாலும், சில விநாடிகளில் முழு பேருந்தும் தீயில் சூழப்பட்டு, அதனைச் சுற்றி கடும் புகைமூட்டம் உருவானது.

அருகில் இருந்த இராணுவ முகாமின் வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆரம்ப விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்க வாய்ப்புள்ளது என இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here