பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார். விஜயத்தின் போது, அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசு சபையின் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இரு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு, சீனாவின் குவாங்சோவிலிருந்து, இலங்கை விமான சேவையின் UL-881 விமானம் மூலம் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்.








