பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.

இதேவேளை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் ட்ரோன் மூலமாக இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் எல்லைப் பகுதியிலும் இராணுவ வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.

லாகூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துவதையடுத்து, அங்கிருந்து அமெரிக்கர்கள் வெளியேற பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும் அமெரிக்கர்கள் யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here