இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக, 31 வயதுடைய ஒரு இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம், கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தமாக ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, அதிகாலை 12:16 முதல் 12:18 வரை, வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதாகவும், பிரசவம் பேராசிரியர் டிரான் டயஸின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாயும் குழந்தைகளும் தற்போது நல்ல ஆரோக்கியத்தில் இருக்கின்றனர் என்றும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்தும் வைத்திய சேவையை பெற்று வருகிறார்கள் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பிரசவம் இலங்கையில் மிகவும் அபூர்வமானதொன்றாகும். இது மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகவும், தேசிய அளவில் நினைவுகூரத்தக்க நிகழ்வாகவும் கருதப்படுகிறது.








