தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் தென் மாகாண அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் அவை தற்போது இல்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போது கட்சிகள் முன்வைக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்றும், பணத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்  சிந்தக குலரத்ன மற்றும் சன்ன டி சில்வா  ஆகியோர் இந்த புதிய சட்டம் குறித்து அங்கிருந்த மக்களுக்கு அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here