இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, வழியிலே ஒரு உந்துருளியுடன் (lorry) மோதியதில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பரவலில் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட சமயத்தில், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அப்பகுதியில் நிலவும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here