ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், இந்திய அணி வீரர் விராட் கோலி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here