அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு எதிராக சோதனைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

தனி உரிமையாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ரூ.100,000 முதல் ரூ.500,000 வரை அபராதம், அல்லது 5 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ.500,000 முதல் ரூ.5,000,000 வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருட்களை அரசு உடமையாக மாற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டாவது முறையாக குற்றம் செய்தால், அபராதத் தொகை இருமடங்காக அதிகரிக்கப்படலாம் மற்றும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறை தொடர்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here