2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரசுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க “ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம்”, 9 ஆம் இலக்க “வேலையாட்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்” மற்றும் 10 ஆம் இலக்க “ஊழியர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்” ஆகியவை 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இதற்கமைய, தேசிய குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.17,500 இலிருந்து ரூ.27,000 ஆக 2025 ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2026 ஜனவரி 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச சம்பளத் தொகை, ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF), மேலதிக நேரக் கொடுப்பனவு, பணிக்கொடை, மகப்பேற்றுக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற அனைத்து சட்டரீதியான கொடுப்பனவுகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளைச் சரியாக அமுல்படுத்துவதற்கான அதிகாரம் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சரவை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here