பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  வெளியிட்டுள்ளது.

66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 4ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், புதிய தலைவராக சஹீன் ஷா அப்ரிடி அணி தலைமையை ஏற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here