வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அவர் தெரிவித்ததாவது:

“மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று (12) முதல் தாதியர் உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் போராட்டம் நீடித்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதற்கிடையில், வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து உத்தியோகத்தர்களிடமிருந்தும் ஒரு புத்தகத்தில் கையொப்பமிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த மாகாணத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளை சுகாதார அமைச்சுக்கு அழைத்து, கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here