போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பங்காற்றிய பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.

போதைப்பொருள் தேசிய பாதுகாப்புக்கும் சமூகவாழ்வுக்கும் பெரும் ஆபத்து என்றும்

போதைப்பொருளுடன் இணைந்த கருப்புப் பொருளாதாரம் நாடு அபிவிருத்தி அடைவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இளைஞர்கள் அடிமைப்படுவதால் குடும்பங்கள், கிராமங்கள், கல்வி, சமூக அமைப்பு ஆகியவை பாதிப்படைந்துள்ளன என்றும் எடுத்துக்கூறினார்.

“வேலையைத் தொடங்குங்கள்; நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்” என்று ஜனாதிபதி பாதுகாப்புப் படையினருக்கு உறுதியளித்தார்.

குற்றவாளிகளின் அச்சுறுத்தலால் அரசு பொறிமுறை பாதிக்கப்பட அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

முன்னாள் அரசியல் காலங்களில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எந்த குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் இன்று உள்ளது” என்று வலியுறுத்தினார்.

போதை வலையமைப்பை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.

மதத் தலைவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

”போதைக்கு அடிமையானவர்களை ஒப்படையுங்கள்; அவர்களை மீண்டு நிற்கச் செய்வோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ராணுவம், கடற்படை, பொலிஸ் தலைமை அதிகாரிகள், உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here