முல்லைத்தீவு, கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கஞ்சாடவுடன் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








