வியட்நாமில் ஏற்பட்ட புயலால் தற்போது 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியுள்ளது.
புயல் வீசி ஓய்ந்த பிறகு இடி மின்னலுடன் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியட்நாமில் புயலால் 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.








