கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பிரதான பாதை மற்றும் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here