ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாளை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிலரே இதுபோன்ற போலி பிரசாரங்களை செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிடட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியாக எச்சரிக்கை விடுத்தும் அதனை ஏற்று நடக்க தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








