இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மாத்திரமே.

அதன்படி, வாக்குகளை வழங்கவுள்ள வாக்காளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் குறிப்பிட்ட நாட்களில் ஆராய வேண்டும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வரப்பிரசாதங்கள் அல்லது தற்காலிக சலுகைகள் தொடர்பில் சிந்திக்காது பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தீர்மானமிக்க ஒன்றாகும்.

பொருளாதார நெருக்கடி, காலி முகத்திடல் போராட்டம் ஆகியவற்றுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும்.

ஆகவே, பொருத்தமானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வாக்காளர்கள் முன்வர வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களில் வேட்பாளர்கள் தொடர்பில் வாக்காளர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here