‘சர்வஜன பலய’ கூட்டணியின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக ‘சர்வஜன பலய’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீரவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான தீர்மானத்தை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
06 மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ‘சர்வஜன பலய’ 2024 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 178,006 வாக்குகளைப் பெற முடிந்தது, இது தேர்தலில் போட்டியிட்ட ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் பெறப்பட்ட ஆறாவது அதிகூடிய மொத்த வாக்குகளாகும்.
இதன்மூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ‘சர்வஜன பலய’ கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி, இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.








