2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,921 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,708 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 1,605 சுற்றுலாப் பயணிகளும்,போலந்திலிருந்து 1,539 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,228 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,196 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 1,163 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here