பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்மானம் எட்டப்படுமாயின் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமெனக் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் குறித்த போட்டிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







