இலங்கையில் பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (13/03/2025) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை அங்கீகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த மாநாட்டை உடன்டிக்கையை  இலங்கை  இன்னும் அங்கீகரிக்கவில்லையென்றாலும், இந்த  உடன்படிக்கையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து அது தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

நாங்கள் இதை ஒரு சட்டமாக அறிமுகப்படுத்தி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம், மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் மன அல்லது உடல் ரீதியான அனைத்து வகையான துஷ்பிரயோகங்களையும் தடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here