Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி…!

மொரந்துடுவ – ஹொரணை வீதியில் பரகஸ்தொட்ட மஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மில்லனியாவில் இருந்து மொரந்துடுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சிறு பாலம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில்...

கிளிநொச்சியில் பெண்கள்,சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைப்பு…

கிளிநொச்சி போலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால்  19.10.2024 பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயபூர்வமாக விசாரணை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களுக்கான பிரதி போலிஸ் அத்தியட்சகர் கலந்து கொண்டனர்.

பிரதி போலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம்…! 

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில்  கிளிநொச்சி முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கதிபர்கள், இரண்டு மாவட்டங்களின் உதவித்தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள...

மட்டக்களப்பில் வேட்பு மனுதாக்கலில் பெண்களுக்கான சரியான இடம் ஒதுக்கவில்லை; மனாஸ் மக்கீன்…

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெண்களுக்கு சரியான முறையில் ஒதுக்கவில்லை. அதேவேளை உள்ளக ஜனநாயத்தை மதிக்க கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவு என்பதுடன்,  எதிர் தரப்பினருக்கு கட்சியில் போட்டியிடுபவர்களுக்கு அல்லது ஒரே கட்சியல் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்பு ஊட்டக்கூடிய சேறுபூசும் நடவடிக்கையில்...

இன்றைய நாளுக்கான வானிலை…!

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,  கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு,...

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் பலி…!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது. சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பல ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞன், சமீபத்தில் தனது திருமண நிகழ்விற்காக நாடு திரும்பி மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார். இதன்போது, இந்த இளைஞன், வெளிநாட்டு...

திடீரென வெடித்து சிதறிய கையடக்கத் தொலைபேசி…!

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன்போது, அங்கிருந்த யாருக்கும்...

கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்கள்…!

ஜா - எல தண்டுகம பிரதேசத்தில் உள்ள கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு கால்வாய்களில் வீசப்படுகின்றது. மேல், வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் உள்ள பல்வேறு கால்நடைப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் இந்த வைரஸ்...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; மூவர் காயம்…!

தெற்கு அதிவேக வீதியில் 153 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18.10) இடம்பெற்றுள்ளது. மத்தல நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்திலிருந்த சக்கரமொன்று பழுதடைந்ததன் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “INS Kalpeni” கப்பல்…!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19.10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img