Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

ஆரம்பமாகிய சென்னை-யாழ்ப்பாண இண்டிகோ விமான சேவை…!

சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று (01.09) முதல் ஆரம்பித்த இண்டிகோ (IndiGo) விமான சேவையின் முதல் விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.  இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்படவுள்ள அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம்…!

2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும்...

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம்…

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலை அருகே இடம்பெற்று இருந்தது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள்...

அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார்; டில்வின் சில்வா…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும்...

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் விரும்புகின்றன; ராஜித சேனாரத்ன…!

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி…!

குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்மலேவத்த பிரதேசத்தில் வீடொன்றினுள்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையாளிக்கு எதிராக குளியாபிட்டிய நீதிமன்றில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரி ஒன்றில் கலந்து...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் ஏற்படாது; சுடில் ஜயருக்…!

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை...

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கிக்கு சீல்…!

கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு இன்று (01.09) சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் சீல் வைக்கப்பட்டு சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவியபோது, ​​பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க,...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

பொதுப் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்படும் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரை உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும்...

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது; கெமுனு விஜேரத்ன…!

ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படுமெனத் தெரிவித்த விஜேரத்ன, விலைத் திருத்தத்திற்கு 4 வீதமான சூத்திரத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 10 ரூபாவினால்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img