Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகரிக்கும் ஆதரவு…!

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ரணிலுடன் கைகோர்த்துள்ளனர். தலதா அத்துகோரள தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், விரைவில் ரணிலுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...

ஜூலை மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு எண்ணிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன..!

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) 2023 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.58% அதிகரிப்பை பதிவு செய்து, 2024 ஜூலையில் 1,087.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் பதிவாகியுள்ளது. இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின் படி, இது முக்கியமாக ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வாசனை...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசும் ரணில்; சுஜீவ சேனசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல கோடிகளை செலவு செய்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்ப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால்...

ஊடகவியலாளர்களுக்கு  யாழ்ப்பாணத்தில் பயிற்சி வேலைத்திட்டம்..!

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நடைபெற்ற  இந்த வேலைத்திட்டத்தில் வியூ ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,400க்கும் மேற்பட்டோர் கைது…!

பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாகக்...

பஸ் மோதியதில் வயோதிபர் பலி…!

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் மணிக்கூண்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுகண்ணாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் இருந்த வயோதிபர் ஒருவர் குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வயோதிபரின்...

எல்லைத்தாண்டுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த 11 பேருடன், அவர்கள் பயணித்த விசை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில...

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த விஜயதாஸ ராஜபக்ஷ…!

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான நீதியை வழங்கும் பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ பேராயருக்கு விளக்கமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் நடடிவக்கை எடுப்பதாகவும் அவர்...

உடுப்பிட்டியில் இரவிரவாக துரித கதியில் போடப்படும் காப்பெட் வீதியின்நோக்கம்  என்ன????

தேர்தல் கால அவசரமா? வீதியின் தரத்தை உறுதி செய்யுமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர். உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வரையிலான வீதியின் மீதி பகுதியையும் காப்பெட்டாக மாற்றி போடப்படும் வேலைகள் மிக வேகமாக இரவிரவாக இடம்பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டிருந்தாலும் வல்வை நாற்சந்தி வரையிலான குறுகிய வீதி தரமாக போடப்பட்டிருந்தது. அதன்...

விபத்துக்குள்ளான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்…!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி இங்கினியாகல...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img