Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

ஜெலன்ஸ்கியை கட்டித் தழுவிய மோடி..!

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பு கெய்வில் இடம்பெற்ற நிலையில் இதன் போது புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “இந்தியா - உக்ரெய்ன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சில...

நாடளாவிய ரீதியில் டெங்கு அதிகரிப்பு..!

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் 33 ஆவது வாரம் வரை 35,118 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 30,575 வழக்குகளை விடவும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரம்...

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்….

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க, தனது 76வது வயதில் இன்று (24.08) காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான சேனாநாயக்க, தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திலித் ஜயவீரவின் ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்…!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு பூராகவும் 2000 கிராமங்களை உள்ளடக்கிய 'வீட்டுக்கு வரும் நட்சத்திரம்' தேர்தல் பிரச்சாரம் இன்று (24.08) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கருத்து தெரிவிக்கையில், பெருமளவான பணத்தை செலவழித்து பேரணிகளை நடத்துவதை விடுத்து கிராமத்திற்கு சென்று மக்களை...

ரணிலின் மேடையில் ஏறும் தலதா சிறிக்கொத்தா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்ப்பில் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலதா அத்துகோரள, கடந்த நாடாளுமன்ற அமர்வில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன், விரைவில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டு கிடப்பதை பார்க்க கவலையாக உள்ளதாக...

ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள்…!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை தயாரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருடமும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில்...

விரைவு ரயிலில் மோதி ஒருவர் பலி…!

பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை ரயில் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ரயில் கடவையை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலில் மோதுண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பேருவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு...

வரி செலுத்தத் தவறியுள்ள இலங்கையர் 1131.5 பில்லியன் ரூபாய் நிலுவையில்..!

இலங்கையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியாகும் போது செலுத்தத் தவறிய மொத்த வரித்தொகை 1131.5 பில்லியன் ரூபாய் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுவதாக  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகமான தொகை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்துக்கு இழக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்துக்கு செலுத்த தவறியுள்ள மொத்த...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 26ஆம் திகதி தபால் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img