Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (07.10) காலை 9.30 மணியிலிருந்து நாளை...

பெருந்தொகை பணம் செலவழித்தும் பயனற்றுப்போன கருத்தரங்கு…!

பொதுக் கல்வி நவீனமயமாக்கலின் கீழ் சிறுவர் புத்தகம் ஒன்றை அச்சிடுவதற்காக தேர்தெடுக்கும் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்த வளவாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு கொடுப்பனவாக பத்து இலட்சத்து 90 ஆயிரம் (10,89,546) ரூபா செலவிடப்பட்ட போதும் அந்த கருத்தரங்களில் ஒரு சிறுவர் புத்தகம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கறிகையில்...

சுற்றுலா சென்று வீடு திரும்பும் வழியில் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்…!

பொலன்னறுவை - பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வேனை யோதா கால்வாயில் கவிழ்த்துள்ளது. இதன் காரணமாகவே குறித்த...

அமெரிக்கா, பிரிட்டன் வல்லரசுக்கு கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி…..!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற உலக வல்லரசுகளை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீசத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்பதையும், லெபனா மீது ஹெஸ்புல்லா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும் கருத்தில் கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி சக மேற்கத்திய நாடுகளிடம் இந்தக்...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்  உயர்நீதிமன்றில் முன்னிலையான நிலந்த….!

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தற்போது உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். குறித்த தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என...

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை…..!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை...

மின்கம்பியில் சிக்கி ஆசிரியை பலி…!

பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மற்றுமொரு காணியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….! – இருவர் பலி

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று (06) இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே இருந்த டேங்கர் வெடித்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும்,...

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!

நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (06.10) கைதுசெய்துள்ளனர். நொச்சியாகம, ரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும் அனுராதபுரம் திஸ்ஸவெவ வீதியில் வசிக்கும் 45 வயதுடையவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப்பொருள், 830 மில்லிகிராம் ஹெரோயின்,...

உடல் ஆரோக்கியத்திற்கு விற்றமின் கே…!

விற்றமின் கே என்பது ஒரு வகையில் கொழுப்பில் கரையும் விற்றமின் ஆகும். இது மூளை, இதயம், கல்லீரல் போன்ற உடலின் பல பகுதிகளிலும் சேமிக்கப்படுகிறது. அதனால் போதிய அளவு விட்டமின் கே உடலுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். திராட்சை திராட்சையில் விட்டமின் கே அதிகம் உள்ளது. எனவே வாரத்துக்கு இரண்டு தடவைகளாவது திராட்சைப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img