Tuesday, October 13, 2026
No menu items!

Nilu Niluja

கிரிக்கெட் விளையாடிய மாணவன் உயிரிழப்பு…!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் தலைப்பகுதி மோதியதில் காயம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (04.10) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார். அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியதால் தலைப்பகுதியில்...

துப்பாக்கிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்…

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும் என...

அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதி திறப்பு…!

கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை  செல்லும் வீதி வெள்ளிக்கிழமை (04.10) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வீதி திறக்கப்பட்டமையினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இலகுவாக பயணிக்க வழிவகுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

வீதியின் நடுவில் உறங்கிய நபர்; பேருந்து மோதியதில் பலி…!

திவுலபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திவுலபிட்டிய நைவல தோட்டத்தில் நேற்று (05.10) வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைவல தோட்டம் வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது…!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (02.10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவீதிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்ட சந்தேக...

குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 பேர்…

தலவாக்கலை, அக்கரபத்தன  எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (03.10) காலை குறித்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே திடீரென கலைந்த வந்த குளவிகள் தாக்கியுள்ளன. காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று (03.10) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவராத நிலையில், 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு  45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நெல்லியடி புடவைக்கடைக்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02.10)  இரவு , மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ...

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்…!

பாராளுமன்றத் தேர்தல்  முடிவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிப்போம் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக முக்கியஸ்தர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. "நாங்கள் தேவையான அடிப்படை...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img