Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட விரைவுத் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ், சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசிய செயலகம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர்...

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், மற்றொரு நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது, சந்தேகநபரின் தாயும் காயமடைந்த நிலையில் வீரகெட்டிய...

 சுரேஷ் சாலே இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக சாலே சிகிச்சைக்காக அந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விசாரணைகளின் போது அவர் உரிய முறையில் நடத்தப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு...

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து பொதுபிட்டிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ம் திகதி இரு...

 62 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 40 கிலோகிராம் ‘குஷ்’ எனப்படும்  போதைப்பொருளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அழிக்க உத்தரவிட்டிருந்த போதைப்பொருட்கள் என தெரிவிக்கப்படுகிறது. புத்தளம், வானாத்தவில்லுவ, லக்தோட்டையில் உள்ள விசேட...

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர்...

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரின் பெயரில் கடவுச்சீட்டைப் போலியாகத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்...

உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. BookRetreats.com வெளியிட்ட சமீபத்திய 'State of Retreats 2026' அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தேடல் ஆர்வம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100% அதிகரித்ததை பதிவு செய்ததன் மூலம், அவுஸ்திரேலியா (85%), மொராக்கோ (83%), இங்கிலாந்து (82%) மற்றும் ஸ்பெயின்...

இயன் மருத்துவர் கொலை; நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தற்போதைய அரசாங்கம்...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...