Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பெத்தீகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயன் மருத்துவர் கொலை; பொலிஸ் அதிகாரியின் கைதை அடுத்து விசாரணை தீவிரம்

தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த 49 வயதான சாரதி ஒருவரும் கைது...

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக, குறித்த மேலதிக ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொசொன் அனுசரிப்புகளுக்காக...

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) ஆய்வு செய்துள்ளது. இந்த விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் கடந்த ஜூன் 23 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது...

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவு, பிட்டிபான லெல்லம அருகே, லொறி ஒன்று சரக்குகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்ட சோதனையின்போது நான்கு சந்தேக நபர்கள்...

ரோஹித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ராஜபக்ஷ குறித்த பணியகத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு நிறுவனங்கள்...

வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதனூடாக 16 இலட்சம் பேர் நன்மைகளை பெற்றனர். எனினும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கு...

விஜயதாசவின் மகன், சஜித் அணி உறுப்பினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரகித ராஜபக்ஷவும், ஹொரானை பிரதேசத்துக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் காவலில் எடுக்கப்பட்டதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. கைது தொடர்பில் ஆணைக்குழு குற்றச்சாட்டுகள் அல்லது...

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவொன்றிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்த காரணத்திற்காக இவ்வாறு பதவியில் இருந்து...

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், திட்டமிட்டபடி பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஆம் ஆண்டு மார்ச் 30 முதல்...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...