Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என வாதிட்ட யோஷித ராஜபக்ஷ; தொடரும் வழக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதிட்ட யோஷித ராஜபக்ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சதி அடிப்படையிலானது எனவும் தான் குற்றமற்றவர் எனவும் குறிப்பிட்டார். சதி...

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். மேலும், இது 2024-ஆம் ஆண்டின் 44-ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பொது நிதிப் பொறுப்புக்கூறல்...

சீரற்ற வானிலை; மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஏழு (07) மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கில் ஒரு...

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள்...

இருதய நோய் சிகிச்சை; 3.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக 16 ஆய்வகங்கள்

அரச வைத்தியசாலைகளில் இந்த வருடம் 16 புதிய இருதய வடிகுழாய் ஆய்வகங்களை (cardiac cath labs) நிறுவ சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. இருதய நோயை விரைவாக கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்தல். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைத்தல் ஆகியன இந்த திட்டத்தின் நோக்கம்...

சீரற்ற காலநிலை; ஒருவர் உயிரிழப்பு, 62 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தினபுர, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த...

மாணவன் கத்தி குத்து தாக்குதல்; ஐவருக்கு காயம்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் இன்று (13) ஐந்து மாணவர்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த தொழில்நுட்ப உயர் நிலை மாணவர்கள் அனைவரும் சாதாரண காயங்களுடன் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் அதே...

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விசேட காப்பீட்டு திட்டம்!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக, விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியன இணைந்து ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தத் திட்டம் தேயிலைத் தோட்டங்களிலும் தேயிலைத் தொழிற்சாலைகளிலும் பணபுரியும் தனிநபர்களை உள்ளடக்கும் எனவும் மேலும் ஒவ்வொரு தொழிலாளியின் நிதித் திறனுக்கு ஏற்ப பங்களிப்புகள் சீர்செய்யப்படும் எனவும் அரசாங்கம்...

சீரற்ற வானிலை: அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது. பகல் நேரங்களிலும் சீரற்ற வானிலையால் இருளும் மூடுபனியும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகார சபை, சாரதிகள் பயணிக்கும் போது போது தங்கள் முகப்பு...

கொழும்பில் 204 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு;இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணி முதல் இன்று (13) காலை 06.30 மணி வரையிலான காலப்பகுதியில், 204 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது நேற்றைய தினத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், இரத்தினபுர மாவட்டத்தின்...
- Advertisement -

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...