Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில்...

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு 

மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கதிர்காமம் பிரதான வீதியில் விபத்து….

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31.10.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த 14 பெண்கள் காயமடைந்துள்ள...

12 மாவட்டங்களுக்கு 4ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசி திட்டம்…!

12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி…!

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்)...

வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு…!

மீகொடை – படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (31) அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் மீது 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரை...

ஜனாதிபதியின் செயலாளருக்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது...

தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய மன்னார் நீதவான் உத்தரவு…

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் புதன்கிழமை(30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை யாகாத   சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான்   போலிஸாருக்கு உத்தரவிட்டார். மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை...

“வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்.! ரிஷாட் தெரிவிப்பு!

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29.10.2024) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...